SEO பற்றி அறிந்து கொள்ள உதவும் டாப் 10 இணையதளங்கள் 

SEO பற்றி அறிந்து கொள்ள உதவும் டாப் 10 இணையதளங்கள்- புதியவர்களுக்கும், மேலும் விவரம் அறிந்தவர்களுக்கும்.

நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

சர்ச் என்ஜின் ஆப்டிமைசேஷன் குறுகிய கால தீர்வு அல்ல.

எப்படி சர்ச் வேலை செய்கிறது என்பதை அறிந்து கொள்வதன் மூலமும், முக்கியமான சொற்களையும் வாக்கியங்களையும் உள்ளீடு செய்து பார்ப்பதன்  மூலமும் ,  தொடர்ந்த சோதனை மற்றும்  செயல்படுத்திப்பார்த்தல்  மூலமே  மேம்பாடு அடைய முடியும்.
அல்கோரிதம் எனப்படும் சர்ச் வழிமுறைகள் அடிக்கடி மாறுபட்டுக்கொண்டேயிருக்கும்போது  தொடர்ந்த சோதனை மற்றும்  செயல்படுத்திப்பார்த்தல் மிக முக்கியம்.
நான் கடந்த 15 வருடங்களாக SEO செயல் நிபுணர்கள் மற்றும் அதில் தொடர்ந்து முக்கியமான சொற்களையும் வாக்கியங்களையும் உள்ளீடு செய்து சோதனை மற்றும் செயல்படுத்தி முன்னேற்றமடைந்து கொண்டிருக்கின்றவர்கள் ஆயிரக்கணக்கான  வலைப்பதிவுகளில் வெளியிடுகின்ற டிப்ஸ் மற்றும் தந்திரங்களை படித்து அதை செயல்படுத்துவதன் மூலமுமே seo என்னும் சர்ச் என்ஜின் ஆப்டிமைசேஷனில் சிறப்பாக செயல்படுகிறேன். கீழ்க்கண்ட பட்டியல் புதியவர்களுக்கும் seo-வில் மேலும் சிறப்பாக செயல்பட விரும்புபவர்களுக்கும் நிச்சயமாக உதவும்.
சர்ச் என்ஜின்களில் முதன்மையான கூகுளின் விளக்கம்.
சர்ச் என்ஜின்களில் தேடுபவர்களுக்கு பயனளிக்கவும் அவர்களுக்கு சிறந்த அனுபவம் அளிப்பதர்க்கும் முதலிடம் கொடுங்கள்.அதில் முதல் உபயோகிப்பாளர்  சர்ச் என்ஜின். அவை தேடுபவர்கள் தேவையை கண்டறிய உதவுகின்றன. சர்ச் என்ஜின் ஆப்டிமைசேஷன் என்பது உங்கள் உள்ளீடுகளை புரிந்து கொண்டு விளக்கக்காட்சி அளிக்க உதவுவது.

ஏன் உங்கள் இணையத்தளத்தினை சர்ச் என்ஜினுக்காக  மேம்படுத்த வேண்டும்?

இன்றைய காலகட்டத்தில் எங்கே வியாபாரம் முதலாகத் தொடங்குகிறது? 
ஒவ்வொரு வியாபாரமும் (Software) மென்பொருட்கள் வரையறுத்த செயல்முறைகள் மற்றும் ஸ்மார்ட்போனை அச்சாகக்கொண்டு இயங்குகிறது.
முக்கியமாக இன்டர்நெட் மூலமே நடைபெறுகிறது.
வளர்ந்து வரும் பிராட்பேண்ட் ஊடுருவல் மற்றும் உபயோகிக்க எளியதாகிக்கொண்டிருக்கின்ற ஸ்மார்ட்போன் மூலம் இன்டர்நெட் அணுகுதல், மக்களின் உள்ளங்கையில் தகவல் கிடைக்கச் செய்வது அதைப்பரவலாக்குகிறது.
மக்கள் விருப்படுவது எதைப்பற்றியும்  அறிந்து கொள்ள சர்ச் என்ஜின் இணையதளங்களையே நாடுகின்றனர். சர்ச் என்ஜின்கள் மக்களின் முதல் தொடு  புள்ளியாக செயல்படுகின்றன. மேலும் தேடிய தகவலை சில நொடிகளில் அளிக்கின்றன.
அதனால் சர்ச் என்ஜின்களான கூகுள், மைக்ரோசாப்ட் பிங் போன்றவை அளவில்லாத செல்வாக்கு பெற்றுள்ளன.
ஸ்டாடிஸ்டா எனும் புள்ளி விவர இணையதளக்கணக்குப்படி கூகுள் 86.6 சதமும்,    மைக்ரோசாப்ட் பிங் சர்ச் என்ஜின் 6.7 சதமும் உபயோகப்படுத்தப்படுகின்றன.  நூறு கோடிக்கும் மேலான தேடல்கள் தினமும் நடைபெறுகின்றது.
அதனால் உங்கள் வியாபாரப்பொருட்கள் மற்றும் சேவைகள் சம்பந்தமான முக்கியக்குறிச்சொற்களையும்  மற்றும் வாக்கியங்களையும்  தேடுபொறிகளை முன்னிறுத்தி மேம்படுத்த வேண்டியுள்ளது.

யாருக்காக இந்த வலைப்பதிவு?

SEO எனும் சர்ச் என்ஜின் ஆப்டிமைசேஷன் அறிய விரும்பும் புதியவர்களுக்கும் தொழில் முனைபவர்கள் SEO பற்றி சரியாகப் புரிந்து கொள்வதற்கும் உதவும். அதன் அவசியம் புரிந்து கொண்டு அதற்குறிய செயல்முறைகளுக்கு உரிய செலவு செய்ய வேண்டும்.

சர்ச் என்ஜின் ஆப்டிமைசேஷன் பற்றி புரிந்து கொள்வதன் மூலம் உங்கள் வியாபாரம் பற்றியும் உங்கள் சேவைகளையும் சரியான வாடிக்கையாளருக்கு சரியான நேரத்தில் சென்றடையச்செய்யலாம். உங்கள் இணையத்தளத்தில் அவர்கள் அடுத்து மேற்கொள்ள வேண்டிய செயல் பற்றியும் தெரியப்படுத்தலாம்.

சர்ச் என்ஜின் ஆப்டிமைசேஷன் என்பது ஒரு முறை செயல்படுத்திவிட்டு நிறுத்திவிடுவது அல்ல.

பொறுமையாகவும், தொடர்ந்தும் முக்கியமான குறிச்சொற்களையும்  மற்றும் வாக்கியங்களையும் பயன்படுத்தி தேடு பொறியில் உங்களது  இனைய தளம் முன்னிலையில்  இருக்க அவற்றை மேம்படுத்திக்கொண்டேயிருக்க வேண்டும்.

அதன் மூலம் போட்டியாளர்களை ஜெயிக்க முடியும்.

1.கூகுள்

சர்ச் என்ஜின் ஆப்டிமைசேஷன் (SEO)

https://developers.google.com/search/docs/beginner/seo-starter-guidehttps://developers.google.com/search/docs/basics/get-started

2.MOZ

SEO 101 – சர்ச் என்ஜின் ஆப்டிமைசேஷனின் அவசியம்

https://moz.com/beginners-guide-to-seo/why-search-engine-marketing-is-necessary

3. சர்ச் என்ஜின் லேண்ட்

SEO என்றால்  என்ன?

https://searchengineland.com/guide/what-is-seo

4. வர்ட்ஸ்ட்ரீம்

SEOவின் அடிப்படை- SEO பற்றி அறிய தொடங்குபவர்களுக்கான முழுமையான வழிகாட்டி

https://www.wordstream.com/blog/ws/2021/03/05/seo-strategy

5.சர்ச் என்ஜின் வாட்ச்

SEO அடிப்படை- 22 சர்ச் என்ஜின் ஆப்டிமைசேஷன் பற்றிய அடிப்படை விஷயங்கள்

6. சர்ச் என்ஜின் ஜெர்னல்

https://www.searchenginejournal.com/seo-guide/

7. Ahrefs

https://ahrefs.com/seo

8. நீல் படேல்

https://neilpatel.com/what-is-seo/

9. செம்ரஸ்

SEO-101

https://www.semrush.com/blog/category/seo-101/

10. ஹப்ஸ்பாட்

https://blog.hubspot.com/marketing/seo-strategy

மேலும்  மைக்ரோசாப்ட் பிங்  சர்ச் என்ஜின் ஆப்டிமைசேஷன் பற்றியும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

சில SEO நுட்பங்கள் வேறுபட்டாலும் அணைத்து  சர்ச் என்ஜின்களும் பொதுவான அமைப்பு உள்ளவை.

link-assistant.com/news/bing-seo-tips.html

quicksprout.com/beginners-guide-to-optimizing-for-bing-search/

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன